கல்வராயன்மலையில்2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்புபோலீசார் நடவடிக்கை
கல்வராயன்மலையில் போலீசார் நடத்திய சாராய வேட்டையில் 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி
கச்சிராயப்பாளையம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள ஒரு சில கிராமங்களில் செல்லும் நீரோடைகள் அருகே சமூக விரோதிகள் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜிக்கு புகார் வந்தது. இதையடுத்து அவருடைய உத்தரவின்பேரில் கரியாலூர் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் தலைமையிலான போலீசார் கல்வராயன் மலையில் உள்ள கிராமங்களில் அதிரடியாக சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஏரிக்கரை கிராம வனப்பகுதியில் தலா 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட 4 பேரல்களில் சிலர் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் அமைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பேரல்களில் இருந்த சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி, அதே இடத்தில் கீழே கொட்டி அழித்தனர். மேலும் அங்கு சாராய ஊறல் அமைத்த நபர்கள் யார்? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story