ஈரோடு அ.தி.மு.க.வின் கோட்டை என்பது தவறு, தி.மு.க.வின் எக்கு கோட்டை ; செந்தில் பாலாஜி

ஈரோடு அ.தி.மு.க.வின் கோட்டை என்பது தவறு. இது தி.மு.க.வின் எக்கு கோட்டை பொறுத்திருந்து பாருங்கள் என்று செந்தில் பாலாஜி கூறினார்.
ஈரோடு,
ஈரோட்டில் இன்று மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
பொதுமக்கள் கை சின்னத்திற்கு வாக்களிக்க உற்சாகத்தோடு இருக்கிறார்கள். செல்லும் இடங்களில் மக்கள் உற்சாகத்தோடு வரவேற்பு அளிக்கிறார்கள். முதலமைச்சரின் கடந்த 1½ ஆண்டு கால சாதனையாக கைச்சின்னம் மாபெரும் வெற்றி பெறும். மேற்கு மண்டலம் அ.தி.மு.க.வின் கோட்டை என்பது தவறான கருத்து. முதலமைச்சரின் கோட்டை. அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித்தேர்தல் கூட நடத்த முடியாத ஒரு நிலை இருந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகுதான் நகர்புற உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்பட்டு மக்களின் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன
ஈரோடு அ.தி.மு.க.வின் கோட்டை என்பது தவறு. இது தி.மு.க.வின் எக்கு கோட்டை. பொறுத்திருந்து பாருங்கள் என்றார். அவங்க கட்சியில் எவ்வளவு உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பதை அவரிடம் கேளுங்கள். பா.ஜ.க. ஒரு மிஸ்டு கால் பார்ட்டி. பூத் கமிட்டிக்கு கூட ஆள் இல்லாத கட்சி. இல்லாத ஒரு நபரை இருப்பதை போல் காட்டி அவருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம்.அவர்களை மையப்படுத்தி தேர்தல் நடப்பது போன்ற சூழலை உருவாக்குகின்றனர்" என்றார்.