ஈரோடு இடைத்தேர்தல்: ஓ.பி.எஸ் அணிக்கு தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை கட்சி ஆதரவு...!
ஈரோடு இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ் அணிக்கு தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
சென்னை,
ஈரோடு கிழக்குத்தொகுதிக்கு வரும் பிப்.27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிடுகிறது. அதிமுகவை பொறுத்தவரை ஓ.பி.எஸ, ஈ.பி.எஸ் என இரு அணிகளும் இடைத்தேர்தல் களம் காண்கிறது.
அதிமுகவின் இருதரப்பினரும் பல்வேறு கட்சிகளை சந்தித்து இடைத்தேர்தலில் ஆதரவு கோரி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு சந்தித்து இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின் முடிவில் தனியரசு நிருவர்களுக்கு அளித்த பேட்டியில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு. ஓபிஎஸ்-ஐ தவிர்த்து விட்டு எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவிற்கு வலிமை பெற செய்ய முடியாது என்றும் கூறினார்.
Related Tags :
Next Story