ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: காங்கிரஸ் சார்பில் 34 நட்சத்திர பேச்சாளர்கள்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் 34 நட்சத்திர பேச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை,
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்வதற்கான அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளர்களாக 34 பேரை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளது. இந்த பட்டியலை அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டார்.
அதன் விபரம் வருமாறு:-
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எம்.பி., மேலிட இணை பொறுப்பாளர் சிரிவெல்ல பிரசாத், தேசிய செயலாளர் டாக்டர் ஏ.செல்லக்குமார் எம்.பி., மாணிக்க தாகூர் எம்.பி., தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக்கரசர் எம்.பி. உள்பட 34 பேர் இதில் இடம் பெற்றுள்ளனர்.
Related Tags :
Next Story