ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தேர்தல் அலுவலரிடம் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒப்படைப்பு


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தேர்தல் அலுவலரிடம் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 28 Jan 2023 4:36 PM IST (Updated: 28 Jan 2023 4:37 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி நடைபெறுகிறது. அதில் திமுக கூட்டணி சார்பில் மீண்டும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இதுபோன்று அதிமுகவின் ஓபிஎஸ், மற்றும் ஈபிஎஸ் என இரு அணிகளும் போட்டியிடுவதாக அறிவித்து தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும், டி.டி.வி தினகரன் தலைமையிலான அமமுகவும் இடைத்தேர்தல் களம் காண்கிறது. இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் சூடுபிடித்து வருகின்றது.

இந்த நிலையில் இடைத்தேர்தலுக்கான பணிகள் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள 882 வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்த்து மாவட்ட கலெக்டர் ஒப்படைத்தார்.

இதனை தொடர்ந்து, மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.




Next Story