ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசிநாள்


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசிநாள்
x

இடைத்தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4-ந்தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து இந்த தொகுதிக்கு வருகிற 27-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 31-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை நடந்தது. இடைத்தேர்தலில் போட்டியிட 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். இதில் 83 பேரின் வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், வேட்புமனுவை வாபஸ் பெற இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணிவரை காலக்கெடு உள்ளது. அதைத்தொடர்ந்து சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு நடக்கிறது. வேட்பாளர் இறுதிப்பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட உள்ளது. வரும் 27-ல் வாக்குப்பதிவு, மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தேர்தல் ஆணையத்தால் இடைத்தேர்தலுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்கள் வேட்பாளர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. இதை வேட்பாளர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு, தங்களுக்கு பிடித்த 3 சின்னங்களை குறித்துக்கொண்டனர். இந்த சின்னங்களில் ஏதேனும் ஒன்று அவர்களுக்கு வழங்கப்படும். ஒருவருக்கு மேல் ஒரே சின்னத்தை கேட்டு இருந்தால் குலுக்கல் முறையில் சின்னம் வழங்கப்படுகிறது.


Next Story