ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தேர்வு படிவம் - பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தமிழ்மகன் ஹுசைன் உத்தரவு


ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தேர்வு படிவம் - பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தமிழ்மகன் ஹுசைன் உத்தரவு
x

அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் இன்று மாலைக்குள் படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என அக்கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் ஹுசைன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் இன்று மாலைக்குள் படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என அக்கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் ஹுசைன் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசுவை எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்துள்ளார் எனவும், அவரை தேர்ந்தெடுக்க தங்களுக்கு சம்மதம் எனில் ஒப்புதல் அளிக்கிறேன் என்றும், இல்லையெனில் மறுக்கிறேன் என்றும் வாக்குச்சீட்டில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அந்த படிவத்தை இன்று மாலைக்குள் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் சேர்க்க வேண்டும் எனவும் தமிழ்மகன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.


Next Story