ஈரோடு: பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து - ஓட்டுநர் உட்பட 10-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் காயம்
ஈரோட்டில் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த, பள்ளி வாகனம் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட 10-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் காயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிரேன் உதவியுடன் சாலையில் கவிழ்ந்த வாகனத்தை அப்புறப்படுத்தி, போலீசார் போக்குவரத்தை சரிசெய்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story