ஈரோட்டை சேர்ந்தவர் சர்வதேச கராத்தே போட்டியில் பதக்கம் வென்று சாதனை


ஈரோட்டை சேர்ந்தவர் சர்வதேச கராத்தே போட்டியில் பதக்கம் வென்று சாதனை
x

மலேசியா நாட்டில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் ஈரோட்டை சேர்ந்தவர் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ஈரோடு:

மலேசியா நாட்டில் சர்வதேச அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

போட்டியின் முடிவில் இந்தியா புதேகாய் கராத்தே பயிற்சி பள்ளியில் இருந்து கியோஷி ஈ.கெபிராஜ் தலைமையில் தமிழ்நாடு சார்பில் ஈரோட்டை சேர்ந்த சென்சாய் ஈ.எஸ்.கீர்த்திவாசன் கலந்து கொண்டு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

சாதனை படைக்க கீர்த்திவாசனையும், அவருக்கு உறுதுணையாக இருந்த ஈரோட்டின் தலைமை பயிற்சியாளர் கோவிந்தராஜ், ரமேஷ் ஆகியோரையும் மலேசியா கராத்தே பெடரேசன் அமைப்பாளர் ஆனந்தன் மற்றும் தலைவர் சிவக்குமார் ஆகியோர் பாராட்டினார்கள்.


Related Tags :
Next Story