புதர்மண்டி காணப்படும் இ.ஸ்.ஐ.மருந்தக வளாகம்


புதர்மண்டி காணப்படும் இ.ஸ்.ஐ.மருந்தக வளாகம்
x
திருப்பூர்


ஏழை-எளிய பொதுமக்கள் பயன் பெரும் வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உடுமலையில் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகம் (ESI) கட்டப்பட்டது. இதன் மூலமாக பொதுமக்கள் மருத்துவ சேவையை பெற்று நாள்தோறும் பயன் அடைந்து வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படும் இந்த வளாகத்தில் முறையாக பராமரிப்பு மேற்கொள்வதில்லை. இதனால் வளாகத்தை பார்த்தீனிய செடிகள் ஆக்கிரமித்து வளர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்தகம் உடுமலைப்பகுதிக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும். இதனால் ஏழை-எளிய மக்கள் குறைவான செலவில் நிறைவான சேவையை பெற்று பயன் அடைந்து வருகின்றனர். ஆனால் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் மருந்தக வளாகம் போதிய பராமரிப்பு இல்லாமல் பாதுகாப்பற்று உள்ளது. இதனால் பா்ாத்தீனிய செடிகள் நீண்டு வளர்ந்து புற்களுடன் சேர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இதன் காரணமாக வளாகத்தில் விஷ ஜந்துக்களின் நடமாட்டமும் அதிகரித்து உள்ளது. மேலும் பார்த்தீனிய செடிகள் வெளியிடும் நச்சுக் காற்றால் பொதுமக்களுக்கு உடல் உபாதைகளை ஏற்படுகிறது.

இதனால் ஆரோக்கியத்தை தேடிவந்து அதை தொலைத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. வளாகத்தை சீரமைத்து சுகாதாரத்தை பேணும் வகையில் அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பதில்லை. மேலும் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடமும் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. எனவே உடுமலையில் கட்டப்பட்டுள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தக வளாகத்தை சீரமைப்பதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story