ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி தொடரின் பொம்மன் இலச்சினை இதற்காகத்தான்..! - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டுவீட்


ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி தொடரின் பொம்மன் இலச்சினை இதற்காகத்தான்..! - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டுவீட்
x
தினத்தந்தி 10 Aug 2023 9:37 AM IST (Updated: 10 Aug 2023 10:24 AM IST)
t-max-icont-min-icon

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை விரட்டியது.

சென்னை,

7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியின் இலச்சினையாக "பொம்மன்" எனும் யானையின் சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இலச்சினை அனைவரிடமும் பெரிதளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த இலச்சினை குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"முதுமலை புலிகள் காப்பகத்தில் கைவிடப்பட்ட யானைக் குட்டிகளை தத்தெடுத்து பராமரித்து வரும் பொம்மன் - பெல்லி தம்பதியினரை பெருமைப்படுத்தும் விதமாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டிக்கான இலச்சினைக்கு "பொம்மன்" என பெயர் சூட்டினோம்.

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியை காண, மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்திற்கு வந்திருந்த பொம்மன் - பெல்லி தம்பதியினரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தோம். அவர்களின் தன்னலமற்ற பணிகள் தொடர வாழ்த்தி மகிழ்ந்தோம்" என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story