திருமணம் முடிந்து 5 ஆண்டுகள் ஆன பிறகும் கணவன், குழந்தைகளை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் பெண் ஓட்டம் போலீசார் தீவிர விசாரணை
திருமணமான 5 ஆண்டுகளுக்கு பிறகு கணவன், குழந்தைகளை தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் பெண் ஓட்டம் பிடித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சுந்தராபுரம்
திருமணமான 5 ஆண்டுகளுக்கு பிறகு கணவன், குழந்தைகளை தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் பெண் ஓட்டம் பிடித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கட்டிட தொழிலாளி
பீகார் மாநிலத்தை சேர்ந்த 27 வயதான கட்டிட தொழிலாளிக்கு 26 வயது மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இவர் கோவையை அடுத்த சுந்தராபுரம் இந்திராநகரில் வசித்து வருவதுடன் கட்டிட வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சிட்கோவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
அப்போது அங்கு வேலை செய்து வரும் 28 வயதான வாலிபருக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது. இதனால் 2 பேரும் பல இடங்களுக்கு சென்று உல்லாசம் அனுபவித்து வந்தனர்.
திடீர் மாயம்
இது கட்டிட தொழிலாளிக்கு தெரியவந்ததும், அவர் தனது மனைவியை கண்டித்து உள்ளார். நமக்கு திருமணம் முடிந்து 3 குழந்தைகள் உள்ளனர், அவர்களுடைய எதிர்காலத்துக்காக நீ ஒழுக்கமாக இரு என்று அறிவுரை வழங்கி உள்ளார். இருந்தபோதிலும் அவர் அதை கண்டுகொள்ளாமல் தனது கள்ளக்காதலனுடன் சுற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி கட்டிட தொழிலாளி இரவில் வீட்டில் தூங்க சென்றார். பின்னர் காலையில் எழுந்து பார்த்தபோது அவருடைய மனைவியை காணவில்லை. அக்கம், பக்கத்தினர் மற்றும் நண்பர்கள், தெரிந்தவர்கள் வீடுகளில் தேடியும் அவருடைய மனைவி குறித்த எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
கள்ளக்காதலனுடன் ஓட்டம்
தொடர்ந்து விசாரித்தபோதுதான் அவர் தன்னுடன் வேலை செய்து வந்த கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. உடனே 2 பேரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இது குறித்து கட்டிட தொழிலாளி போத்தனூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் திருமணம் முடிந்து 5 ஆண்டுகள் ஆன பிறகும் கணவர் மற்றும் 3 குழந்தைகளை தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண்ணை தேடி வருகிறார்கள். அத்துடன் இது தொடர்பாக விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.