காலை 9 மணியாகியும் போக அடம்பிடித்த பனி: வானிலை மாற்றத்தால் குழம்பிய சென்னை வாசிகள்..!


காலை 9 மணியாகியும் போக அடம்பிடித்த பனி: வானிலை மாற்றத்தால் குழம்பிய சென்னை வாசிகள்..!
x

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான செங்கல்பட்டு, குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை கடும் பனிமூட்டம் நிலவியது.

சென்னை,

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பனிப்பொழிவானது அதிக அளவில் காணப்படுகிறது. அந்த வகையில் செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக பனிப்பொழிவு அதிக அளவில் காணப்படுகிறது. குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளான, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிகுள்ளாகினர்.

மேலும் பழவேலி, மறைமலைநகர் , கூடுவாஞ்சேரி சிங்கப்பெருமாள் கோயில், ஊரப்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இன்று அதிகாலையில் கடும் பனிப்பொழிவு நிலவியது.

வெள்ளை போர்வை போர்த்தியது போல கடுமையான பனிப்பொழிவு சாலை முழுவதும் இரவு நேரத்தை போலவே காட்சியளித்தது.

இதனால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் எதிரே வரும்

வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்ட முடியாமல் சிரமப்பட்டனர். அனைத்து வாகனங்களும் தங்களது முகப்பு விலக்குகளை எரியவிட்டபடியே சென்றனர். விடிந்த 9 மணி மேலாகியும் கூட வானங்களில் முகப்பு விளக்குகள போட்டுக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது . அந்த அளவிற்கு கடும் பனிப்பொழிவு மற்றும் பனிமூட்டம் காணப்பட்டு வருகிறது.

அதேபோல தென் மாவட்டத்திலிருந்து சென்னை செல்லும்ரெயில்களும் ஹாரன் அடித்தபடி ஊர்ந்து சென்றன. சென்னை புறநகர் ரெயில்களும் ஹாரன் அடித்தப்படியே இயக்கப்பட்டன. காலையில் பணிக்கு செல்வோர் இது இரவா அல்லது பகலா என்ற நிலைமைக்கு சென்றனர்.

சிக்கிம் போன்ற இடங்களில் ஏற்படும் பனிப்பொழிவு போல் தற்போது தமிழகத்திலும் பல இடங்களில் பனி பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story