ஒவ்வொரு நாளையும் திட்டமிட்டு வாழ வேண்டும் ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு


ஒவ்வொரு நாளையும் திட்டமிட்டு வாழ வேண்டும் ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு
x

ஒவ்வொரு நாளையும் திட்டமிட்டு வாழ வேண்டும் என்று ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

திருச்சி

திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி நிறுவனர் வித்யா சேவா ரத்னம் கே. சந்தானத்தின் உருவ சிலை திறப்பு விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. தெலுங்கானா கவர்னரும் புதுச்சேரி துணை நிலை கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கே.சந்தானத்தின் உருவச் சிலையைத் திறந்து வைத்து, அவரது உருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். கல்லூரியின் செயலர் மீனா, தலைவர் தோட்டா பி.வி.ராமானுஜம் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி தலைமை செயல் அதிகாரி கு.சந்திரசேகரன், இயக்குநர் எஸ்.அபர்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசும்போது, நமக்கு கொடுக்கப்பட்ட வேலையை நாம் சிறப்பாக செய்தால் அங்கீகாரம் தானாக கிடைக்கும். சின்ன செயல்களாக இருந்தாலும் அதைக் கவனிப்புடன் செய்ய வேண்டும். வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் திட்டமிட்டு வாழ வேண்டும். யோகா செய்வதால் உடல் மற்றும் மனம் ஆரோக்கியம் பெறும். ஆகவே மாணவிகளாகிய நீங்கள் தினமும் யோகா செய்ய கற்றுக்கொள்ளுங்கள். வாழ்க்கையில் சிரிப்பு என்பது மிகவும் அவசியம். அதே போல விமர்சனங்களைத் தூக்கி எறிய வேண்டும். அப்போது தான் சாதனையாளராக மாற முடியும். முடியாததை முடித்துக் காண்பிப்பவர்கள் தான்சாதனையாளர்களாக ஆக முடியும் என்றார். முடிவில் கல்லூரி முன்னாள் முதல்வர் வித்யாலெட்சுமி நன்றி கூறினார். இதில், கல்லூரி முதல்வர் கெஜலட்சுமி மற்றும் துணை முதல்வர்கள், பேராசிரியர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story