அலுவலகத்தில் அனைவரும் முழு நேரமும் முறையாக முககவசம் அணிந்தபடி இருக்க வேண்டும்


அலுவலகத்தில் அனைவரும் முழு நேரமும் முறையாக முககவசம் அணிந்தபடி இருக்க வேண்டும்
x

அலுவலகத்தில் அனைவரும் முழு நேரமும் முறையாக முககவசம் அணிந்தபடி இருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் தினசரி தொற்று 20 என்ற அளவில் இருந்த நிலை தற்போது நாளொன்றுக்கு 1,400 என்று உயர்ந்திருக்கிறது. பிஏ.5, பிஏ.2.38 மற்றும் கொரோனாவின் பல்வேறு வகையான வைரஸ் தொற்று அதிகரித்து வருவதாக சோதனையில் தெரியவந்துள்ளது.

இந்த வகை வைரஸ்தான் தொற்று அதிகரிப்பதற்கான காரணமாக உள்ளது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதை தடுப்பதற்கு தடுப்பூசி செலுத்திக்கொள்வது, முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை சுத்தமாக வைத்துக்கொள்வது ஆகியவை அவசியமாகும்.

எதனால்...?

சந்தைகள், மால்கள், பொது இடங்களுக்கு செல்வதால்தான் 26 சதவீதம் பேருக்கு தொற்று ஏற்பட காரணம் என்று தெரியவந்துள்ளது. பணியிடங்களில் 18 சதவீதமும், பயணத்தில் 16 சதவீதமும், கல்வி நிலையங்கள், ஓட்டல், பயிற்சி நிலையங்களில் 12 சதவீதம் பேரும் தொற்றுக்கு ஆளாகின்றனர்.

கொரோனா பரவல் தடுப்பு நடைமுறைகள் அனைத்தும் பின்பற்றப்படுவதை போலீஸ், வருவாய்த் துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் உறுதிசெய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதற்காக சில உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.

முழு நேரமும்....

அதன்படி, அலுவலகத்திற்கு செல்லும் முன்பு அனைவருக்கும் வெப்பப் பரிசோதனை செய்யப்பட வேண்டும். யாருக்கும் காய்ச்சல் இருந்தால் பரிசோதனைக்கு அனுப்பி தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

அலுவலகத்தில் முறையாக முககவசம் அணிந்தபடி முழு நேரமும் இருக்க வேண்டும். கைகளை கழுவுவதற்கான வசதிகள் செய்து தரப்பட வேண்டும். காற்றோட்டமாக அலுவலகத்தை வைத்துக்கொள்ள வேண்டும். தடுப்பூசியை செலுத்திக்கொள்ள பணியாளர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story