பழைய குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்


பழைய குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்
x

பழைய குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் அறிவுறுத்தினார்.

திருப்பத்தூர்

போலீஸ் நிலையத்தில் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் நேற்று நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீஸ் நிலையத்தில் அனைத்து வகையான கோப்புகள் மற்றும் அனைத்து விதமான ஆயுதங்கள் சரியாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கண்காணிக்க வேண்டும்

மேலும் பழைய குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும், பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், சாலை விபத்துகள் நடைபெறும் இடங்களில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆலோசனைகள் வழங்கினார்.

நாட்டறம்பள்ளி பகுதிகளில் தொடர் குற்றம் செய்பவர்கள் யார்?, குற்றவாளிகள் கண்காணிக்க படுகிறார்களா?, வேறு எந்த பகுதிகளில் தொடர்ந்து பிரச்சினைகள் உள்ளது என கேட்டறிந்தார். ஆந்திர மாநில எல்லையில் உள்ள சோதனை சாவடியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி கஞ்சா கடத்தலை தடுக்க வேண்டும் என கூறினார்.

இந்த ஆய்வின் போது வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், நாட்டறம்பள்ளி இன்ஸ்பெக்டர் மலர் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story