முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் நகை-பணம் திருட்டு


முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் நகை-பணம் திருட்டு
x

காவேரிப்பாக்கம் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் நகை-பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டு குளக்கரை தெருவில் வசித்துவருபவர் கன்னியப்பன் (வயது 53). முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவர் நேற்று அதிகாலை வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் வீட்டு அறையில் இருந்த பீரோவின் கதவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 5 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் பணம் ஆகியவை திருடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மற்றும் கை ரேகை நிபுணர்கள் சென்று தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுக்குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story