159 மையங்களில் குரூப்-4 தேர்வு


159 மையங்களில் குரூப்-4 தேர்வு
x

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் குரூப்-4 தேர்வை 42 ஆயிரத்து 375 பேர் எழுதுகிறார்கள்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் குரூப்-4 தேர்வை 42 ஆயிரத்து 375 பேர் எழுதுகிறார்கள்.

குரூப்-4 தேர்வு

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தமிழ்நாடு அரசு தேர்வாணைய குழு உறுப்பினர் பாலுச்சாமி ஆகியோர் சிவகங்கையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குரூப்-4 பணியிடத்திற்கான தேர்வுகள் நடைபெறுகின்றன. இதையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் 159 தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக சிவகங்கை தாலுகாவில் 38 மையங்களும், காரைக்குடி தாலுகாவில் 34 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்வை மொத்தம் 42 ஆயிரத்து 375 பேர் எழுதுகின்றனர். தேர்வு நடைபெறும் பகுதிகளுக்கு செல்லும் வகையில் சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்பாடுகள்

தேர்வு நடைபெறும் மையத்திற்கு காலை 9 மணிக்குள் தேர்வு எழுதுபவர்கள் வரவேண்டும். ஒரு தேர்வு மையத்திற்கு 300 பேர்கள் தேர்வு எழுதும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து தேர்வு மையங்களிலும் துணை வட்டாட்சியர் நிலையில் ஒரு அலுவலர் நோடல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தவிர பறக்கும் படைகள் தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.Next Story