தர்மபுரி மாவட்டத்தில்பிளஸ்-2 தேர்வில் 45 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி


தர்மபுரி மாவட்டத்தில்பிளஸ்-2 தேர்வில் 45 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி
x
தினத்தந்தி 8 May 2023 7:00 PM GMT (Updated: 8 May 2023 7:01 PM GMT)
தர்மபுரி

தமிழகத்தில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. தர்மபுரி மாவட்டத்தில் 107 அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என 176 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வை எழுதினார்கள்.

இவர்களில் தர்மபுரி அரசு மாதிரி பள்ளி, சித்தேரி பழங்குடியினர் நல பள்ளி ஆகிய 2 அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள், பிளஸ்-2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றனர். இந்த பள்ளிகள் உள்பட அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 45 பள்ளிகள் பிளஸ்-2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்தன.


Next Story