தர்மபுரி என்ஜினீயர் யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி; இந்திய அளவில் 523-வது ரேங்க் பெற்றார்


தர்மபுரி என்ஜினீயர் யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி; இந்திய அளவில் 523-வது ரேங்க் பெற்றார்
x
தினத்தந்தி 2 Jun 2023 12:30 AM IST (Updated: 3 Jun 2023 8:18 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி இலக்கியம்பட்டியை சேர்ந்தவர் எழிலரசன் (வயது 24). என்ஜினீயரான இவர் யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இந்திய அளவில் 523-வது ரேங்க் பெற்றுள்ளார். இதுகுறித்து எழிலரசன் கூறுகையில், எனது தந்தை விழுப்புரத்தில் சர்க்கரை ஆலை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். தாயார் தர்மபுரி அருகே அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். தர்மபுரியில் பள்ளி படிப்பை முடித்த நான் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் முடித்தேன்.

பொதுமக்களுக்கு சேவையாற்றும் பணியில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. இதனால் யு.பி.எஸ்.சி. தேர்வு எழுத முடிவு செய்து கடந்த 2020-ம் ஆண்டு முதல் இந்த தேர்வை எழுத தொடங்கினேன். 3-வது முறையாக இந்த தேர்வை எழுதினேன். இப்போது இந்த தேர்வில் வெற்றி கிடைத்துள்ளது. இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.


Next Story