தர்மபுரி மாவட்டத்தில் உதவி சிறை அலுவலர் பதவிக்கான போட்டித் தேர்வு நாளை நடக்கிறது


தர்மபுரி மாவட்டத்தில் உதவி சிறை அலுவலர் பதவிக்கான போட்டித் தேர்வு நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 30 Jun 2023 12:30 AM IST (Updated: 30 Jun 2023 1:28 PM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நாளை (சனிக்கிழமை) நடத்தப்படும் உதவி சிறை அலுவலர் பதவிக்கான போட்டித் தேர்வை தர்மபுரி மாவட்டத்தில் 470 பேர் எழுதுகிறார்கள்.

இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

போட்டி தேர்வு

தர்மபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் உதவி சிறை அலுவலர் பதவிக்கான கொள்குறி வகை போட்டிதேர்வு நாளை (சனிக்கிழமை) முற்பகல் மற்றும் பிற்பகல் ஆகிய இரண்டு நேரங்களில் 5 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. இணைய வழிமுறையில் நடைபெறும் இந்த தேர்வை மொத்தம் 470 தேர்வர்கள்எழுதுகிறார்கள்.

இந்த தேர்வுக்காக அமைக்கப்பட்டுள்ள மையங்களில் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு அளவில் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் பஸ்கள் நின்று செல்லும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விதிமுறைகள்

இந்த தேர்வை எழுதும் தேர்வர்கள் நாளை காலை 8.30 மணிக்கு முன்னதாக தேர்வு மையத்திற்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதன் மூலம் கடைசி நேரம் அலைச்சல்களை தவிர்த்துக் கொள்ளலாம். இந்த தேர்வை எழுதும் தேர்வர்கள் தேர்வாணைய விதிமுறைகளை முழுமையாக படித்து கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story