பிளஸ்-1 பொதுத்தேர்வில் 84.21 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி


பிளஸ்-1 பொதுத்தேர்வில் 84.21 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
x

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வில் 84.21 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

மயிலாடுதுறை


மயிலாடுதுறை மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வில் 84.21 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

பிளஸ்1 தேர்வு

தமிழகத்தில் பிளஸ்-1 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன. பிளஸ்- 1 வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நிறைவுபெற்று, நேற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

தேர்ச்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் 5 ஆயிரத்து 74 மாணவர்களும், 5 ஆயிரத்து 955 மாணவிகளும் என மொத்தம் 11 ஆயிரத்து 29 பேர் தேர்வு எழுதினர். அதில் மாணவர்கள் 3 ஆயிரத்து 850 பேரும், மாணவிகள் 5 ஆயிரத்து 437 பேரும் என மொத்தம் 9 ஆயிரத்து 287 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் 75.88 சதவீதம் மாணவர்களும், 91.3 சதவீதம் மாணவிகளும் தேர்ச்சி பெற்று உள்ளனர். இதன் மூலம் பிளஸ்-1 தேர்வில் மயிலாடுதுறை மாவட்டம் 84.21 சதவீதம் தேர்ச்சியை பெற்று உள்ளது.


Next Story