ஆங்கிலம், இந்தியில் மத்திய ரிசர்வ் காவலர் போட்டித்தேர்வு - திமுக எம்.பி. கனிமொழி கண்டனம்


ஆங்கிலம், இந்தியில் மத்திய ரிசர்வ் காவலர் போட்டித்தேர்வு - திமுக எம்.பி. கனிமொழி கண்டனம்
x

மத்திய ரிசர்வ் காவலர் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருப்பதற்கு கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மத்திய ரிசர்வ் படையின் காவலர் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "மத்திய ரிசர்வ் காவல் படையின் காவலர் - CT(Tradesman/Technical & Pioneer) பணிகளுக்கானப் போட்டித் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடைபெறும் என்று ஒன்றிய அரசு அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது.

இந்தி பேசாத மக்களிடம் இந்தியைத் திணிக்கும் செயல்களை ஒன்றிய அரசு நிறுத்திவிட்டு, நமது அரசமைப்பில் பட்டியலிடப்பட்டுள்ள 22 மொழிகளிலும் தேர்வுகளை நடத்திட வலியுறுத்துகிறேன். பல மொழியினங்களின் ஒத்துழைப்பில் உருப்பெற்றதே இந்திய ஒன்றியம் என்பதை ஒன்றிய பாஜக அரசு மறவாது இருக்கட்டும்" என்று கூறியுள்ளார்.


Next Story