சுகாதார அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு - ஹால் டிக்கெட் வெளியீடு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு


சுகாதார அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு - ஹால் டிக்கெட் வெளியீடு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
x

காலி பணியிடங்கள் நேரடி நியமனங்கள் செய்வதற்கான கணினி வழி தேர்வுகான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு பொது சுகாதார பணிகளில் அடங்கிய சுகாதார அலுவலர் பதவிக்கான காலி பணியிடங்கள் நேரடி நியமனங்கள் செய்வதற்கான கணினி வழி தேர்வுகான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ,

தமிழ்நாடு பொது சுகாதாரப் பணிகளில் அடங்கிய சுகாதார அலுவலக அலுவலர் பணிக்கான காலி பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்காக எழுத்து தேர்வு பிப்ரவரி 13ஆம் தேதி அன்று முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் ஹால் டிக்கெட் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒரு முறை பதிவு மூலம் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீட்டு செய்து ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story