எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ குழுவினர் ஆய்வு


எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ குழுவினர் ஆய்வு
x

எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெல்லி மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர்.

திருவண்ணாமலை

மத்திய 15-வது நிதி மானிய குழுவை சேர்ந்த டெல்லி டாக்டர் மோனாகுப்தா, அட்வைசர் நேஷனல் ஹெல்த் சிஸ்டம்ஸ் ரிசோர்ஸ் சென்டர் அடங்கிய குழுவினர் ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பையூர், அரியப்பாடி, ஆரணி நகர ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற இடங்களில் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து சுகாதார நலத்திட்டங்கள் கிராம மக்களுக்கு எவ்வாறு சென்றடைகிறது என மக்களிடம் நேரடியாகவே சென்று கருத்து கேட்பு நடத்தினர்.

ஆய்வின் போது சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் டி.என்.சதீஷ்குமார், துணை இயக்குனர்கள் (காசநோய்) அசோக், டாக்டர்கள் கார்த்தி, அன்பரசி, சுரேஷ், செந்தில், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஹேம்நாத் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story