மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு


மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு
x

மயிலாடுதுறையில், சாலையில் சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது

மயிலாடுதுறை

மயிலாடுதுறை:

மயிலாடுதுறையில் அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகமாக இருந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று மயிலாடுதுறையில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவர் கல்லூரி முடித்து தனது மோட்டார்சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார்சைக்கிள் என்ஜினில் உள்ள வயரில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. இதனை அறிந்த மாணவர் மோட்டார்சைக்கிளை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு உடனடியாக தீயை அணைத்தார். இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. ஆனால் மோட்டார்சைக்கிள் சேதமடைந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story