வாகனம் மோதி ரெயில்வே கேட் சேதம் அடைந்ததால் பரபரப்பு
சங்கரன்கோவிலில் வாகனம் மோதி ரெயில்வே கேட் சேதம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் ெரயில் நிலையம் அருகே சங்கரன்கோவில்-புளியங்குடி சாலையில் அமைந்துள்ள ெரயில்வே கேட் மீது நேற்று அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் ெரயில்வே கேட் சேதமடைந்தது. இந்தநிலையில் காலை 8 மணிக்குள் 4 ெரயில்கள் சங்கரன்கோவில் ெரயில் நிலையத்தில் கடக்கும் சூழ்நிலை ஏற்பட்டதால் ெரயில்வே ஊழியர்கள் மற்றும் ெரயில்வே போலீசார், ெரயில்வே கேட் பகுதிக்கு விரைந்து வந்தனர். இரும்பு சங்கிலியை வைத்து தடுப்பு அமைத்து வாகனங்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து ெரயில்வே கேட்டை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ெரயில்வே கேட்டை சேதப்படுத்திய வாகனம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story