நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிளால் பரபரப்பு...!


நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிளால் பரபரப்பு...!
x

சிவகாசி அருகே நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிளால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

விருதுநகர்


விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் கண்ணன். இவர் தனது மோட்டார் சைக்கிளை பி.கே.என்.ரோட்டில் உள்ள ஒரு மெக்கானிக்கிடம் பழுது சரி பார்த்துள்ளார். பின்னர் மெக்கானிக் அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற போது திடீரென என்ஜினீல் இருந்து புகை வந்துள்ளது.

இதை தொடர்ந்து வாகனத்தை நிறுத்திய சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமை யிலான தீயணைப்பு வீரர்கள் பி.கே.என்.ரோட்டுக்கு சென்று அங்கு எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story