பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்படவில்லை - மாவட்ட கலெக்டர் விளக்கம்


பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்படவில்லை - மாவட்ட கலெக்டர் விளக்கம்
x

திருவந்தவார் நடுநிலைப்பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்படவில்லை என மாவட்ட கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார்.

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த திருவந்தவார் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 90-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் குடிநீர் தொட்டியில் இன்று தண்ணீர் குடிக்க சென்ற போது துர்நாற்றம் வீசுவதாக மாணவர்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். பள்ளியின் குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக தகவல் பரவியது.

இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் திருவந்தவார் நடுநிலைப்பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்படவில்லை என மாவட்ட கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து விளக்கம் அளித்த மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் ,

அதிக பயனற்ற தொட்டியில் அழுகிய முட்டையை காகம் கொண்டு வந்து தண்ணீர் தொட்டியில் போட்டுள்ளது என தெரிவித்தார். மேலும் திருவந்தவார் நடுநிலைப்பள்ளி குடிநீர் தொட்டியை இடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

1 More update

Next Story