மகளிர் சுய உதவி குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் விற்பனை கண்காட்சி


மகளிர் சுய உதவி குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் விற்பனை கண்காட்சி
x

அரக்கோணத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் விற்பனை கண்காட்சி 7 நாட்கள் நடக்கிறது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களான அழகு சாதனங்கள், பொம்மை வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், கைத்தறி சேலை வகைகள், தானிய உணவு வகைகள், ஊறுகாய் வகைகள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள், அணிகலன்கள் மற்றும் அனைத்து வகையான தினசரி பயன்பாட்டு பொருட்களை மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் மகளிர் சுய உதவி குழுக்களின் மூலம் காட்சிபடுத்தி, அதனை விருப்ப கண்காட்சி மூலம் பொது மக்களுக்கு சரியான விலையில் விற்பனை செய்யவதற்குரிய நடவடிக்கைகளானது தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரண்டாவது விருப்ப கண்காட்சியானது அரக்கோணம் மங்கம்மாபேட்டை ரயில்வேகேட், கிருஷ்ணா தொழிற்பயிற்சி நிறுவனத்தில் வருகிற 29-ந் தேதி முதல் 4.4.23-ந் தேதி வரை 7 நாட்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளதால், இதில் பயன்பெற விரும்பும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், தங்களது உற்பத்தி பொருட்கள் பற்றிய விவரங்களை, மகளிர் திட்டத்தில் பதிவு செய்து கொள்ளவும். பொது மக்கள் இந்தக் கண்காட்சியைப் பார்வையிட்டு, தங்களுக்குத் தேவையான மகளிர் சுய உதவி குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சரியான விலையில் பெற்று பயன் பெறலாம்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் வளர்மதி தெரிவித்தார்.


Next Story