மத்திய அரசின் மக்கள்நல திட்டங்கள் குறித்த கண்காட்சி


மத்திய அரசின் மக்கள்நல திட்டங்கள் குறித்த கண்காட்சி
x

வாணியம்பாடியில் மத்திய அரசின் மக்கள்நல திட்டங்கள் குறித்த கண்காட்சி நடைபெற்றது.

திருப்பத்தூர்

மத்திய அரசின் மக்கள் நல திட்டங்கள் குறித்து வாணியம்பாடி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி வளாகத்தில் மூன்று நாட்கள் புகைப்பட மற்றும் டிஜிட்டல் கண்காட்சி, கருத்தரங்குகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்த தொடக்க விழா நேற்று காலை கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு மத்திய தகவல் தொழில்நுட்ப பிரிவு கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். இஸ்லாமிய பெண்கள் கல்லூரி முதல்வர் ரேணு முன்னிலை வகித்தார். கள விளம்பர பிரிவு அலுவலர் முரளி வரவேற்று பேசினார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல மத்திய மக்கள் தொடர்பக கூடுதல் தலைமை இயக்குனர் காமராஜ், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா ஆகியோர் தொடக்க உரையாற்றினர்.

சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி தொகுதி கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில், அரசு திட்டங்கள் சமுதாயத்திற்கும் மக்களுக்கு சென்றடையும் வகையில் ஓவியம் மூலமாக வரைந்து முதல் ஐந்து இடத்தை பிடித்த மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் சிறப்பு பரிசுகளை எம்.எல்.ஏ. செந்தில்குமார் வழங்கினார். இந்தியன் வங்கி, தபால் துறை அதிகாரிகள், மருத்துவ பிரிவு அதிகாரிகள், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரிகள், கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கண்காட்சி நாளை (வியாழக்கிழமை) வரை நடைபெறுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story