தமிழக அரசின் திட்டங்கள் குறித்த கண்காட்சி
செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழக அரசின் திட்டங்கள் குறித்த கண்காட்சி 600 மாணவ- மாணவிகள் பார்வையிட்டனர்
மயிலாடுதுறை தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக, கடந்த 29.04.2023 புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டு, அதனை மாணவ, மாணவிகள் பார்வையிட்டு வருகின்றனர். இந்தப் புகைப்பட கண்காட்சியில், தமிழக முதலமைச்சரால் தொடங்கி வைத்த புதிய திட்டங்கள், அரசால் வழங்கப்பட்ட நலதிட்ட உதவிகள் குறித்த புகைப்படங்கள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் தமிழ்நாடு அரசின் பல்வேறு சிறப்பு திட்டங்களான, மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம், புதுமைப்பெண் திட்டம், பள்ளி மாணவர்களுக்கு வானவில் திட்டம், மஞ்சப்பை திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், சுற்றுச்சூழல் காலநிலைமாற்றத்துத்துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் பிற துறை அமைச்சர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின் மற்றும் மாவட்ட கலெக்டர் வழங்கிய நலத்திட்ட உதவிகளின் புகைப்படங்கள் உள்ளிட்ட 100- க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது. இப்புகைப்படக்கண்காட்சியை 600 - க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்.