ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் 'முதலமைச்சரின் காலை உணவு திட்டம்' விரிவாக்கம்..!


ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம்..!
x
தினத்தந்தி 7 Aug 2023 1:30 PM IST (Updated: 7 Aug 2023 1:34 PM IST)
t-max-icont-min-icon

ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் 'முதலமைச்சரின் காலை உணவு திட்டம்' விரிவாக்கம் செய்யப்படுகிறது.

சென்னை,

தமிழகத்தில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் மூலம் 1 முதல் 5-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு நாள்தோறும் காலையில் சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த திட்டம் அனைத்து அரசு தொடக்க பள்ளிகளிலும் விரிவுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி, முதலமைச்சரின் காலை உணவு திட்டம் வருகிற 25-ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை திருக்குவளையில் நடக்கும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதன்மூலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் செயல்படும் 31,008 அரசுப் பள்ளிகளில் பயிலும் 15.75 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாணவருக்கும் காய்கறிகளுடன் 100 மி.லி. சாம்பார் மற்றும் 150-200 கிராம் உணவு வழங்கப்படும் எனவும், வாரத்திற்கு இரண்டு முறையாவது உள்ளூரில் கிடைக்கும் சிறுதானியங்களைக் கொண்டு காலை உணவு வழங்கப்படும் எனவும், மாணவர்களுக்கு காலை 8 மணி முதல் 8.50 மணி வரை உணவு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story