விழுப்புரம் மாவட்டத்தில் 55,819 மாணவர்களுக்கு காலை உணவு: அதிகாாி தகவல்


விழுப்புரம் மாவட்டத்தில் 55,819 மாணவர்களுக்கு காலை உணவு: அதிகாாி தகவல்
x

கண்டம்பாக்கத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளியில், காலை உணவு சாப்பிட்ட சிறுவன் தனது அக்காளுக்கு புன்னகையுடன் உணவை ஊட்டிவிடும் காட்சி. 

தினத்தந்தி 26 Aug 2023 12:15 AM IST (Updated: 26 Aug 2023 1:56 PM IST)
t-max-icont-min-icon

காலை உணவு விரிவாக்க திட்டத்தின் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் 1,026 அரசு பள்ளிகளில் படிக்கும் 55,819 மாணவர்கள் பயன்பெறுகிறார்கள் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விழுப்புரம்

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் முதல்கட்டமாக விழுப்புரம் நகராட்சியில் 16 அரசுப்பள்ளிகளில் 1,902 மாணவ- மாணவிகளுக்கும், திண்டிவனம் நகராட்சியில் 6 அரசுப்பள்ளிகளில் 261 மாணவ- மாணவிகள் என மொத்தம் 22 அரசுப்பள்ளிகளில் 2,163 மாணவ- மாணவிகள், காலை உணவு திட்டத்தின்கீழ் பயன்பெற்று வருகின்றனர்.

தற்போது இந்த காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, நேற்று முதல் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் விழுப்புரம் நகராட்சியில் 1 அரசுப்பள்ளியில் 293 மாணவ- மாணவிகளும், கோட்டக்குப்பம் நகராட்சியில் 5 அரசுப்பள்ளிகளில் 215 மாணவ- மாணவிகளும் பயன்பெறுகிறார்கள்.

பேரூராட்சி

அதேபோன்று பேரூராட்சி பகுதிகளில் செஞ்சி 5 அரசுப்பள்ளிகளில் 442 பேரும், அனந்தபுரம் 4 அரசுப்பள்ளிகளில் 276 பேரும், மரக்காணம் 11 அரசுப்பள்ளிகளில் 719 பேரும், வளவனூர் 4 அரசுப்பள்ளிகளில் 295 பேரும், விக்கிரவாண்டி 3 அரசுப்பள்ளிகளில் 314 பேரும், அரகண்டநல்லூர் 3 அரசுப்பள்ளிகளில் 91 பேரும், திருவெண்ணெய்நல்லூர் 2 அரசுப்பள்ளிகளில் 249 பேரும் பயன்பெறுகிறார்கள்.

ஒன்றியங்கள்

மேலும் ஒன்றியத்தை பொறுத்தவரை மேல்மலையனூர் 100 அரசுப்பள்ளிகளில் 3,956 பேரும், செஞ்சி 69 அரசுப்பள்ளிகளில் 3,628 பேரும், வல்லத்தில் 82 அரசுப்பள்ளிகளில் 2,756 பேரும், ஒலக்கூர் 60 அரசுப்பள்ளிகளில் 2,517 பேரும், மயிலம் 64 அரசுப்பள்ளிகளில் 3,405 பேரும், மரக்காணம் 86 அரசுப்பள்ளிகளில் 4,517 பேரும், வானூர் 88 அரசுப்பள்ளிகளில் 3,967 பேரும், காணை 75 அரசுப்பள்ளிகளில் 5,180 பேரும், விக்கிரவாண்டி 67 அரசுப்பள்ளிகளில் 4,025 பேரும், கோலியனூர் 78 அரசுப்பள்ளிகளில் 4,363 பேரும், கண்டமங்கலம் 83 அரசுப்பள்ளிகளில் 3,394 பேரும், முகையூர் 64 அரசுப்பள்ளிகளில் 5,116 பேரும், திருவெண்ணெய்நல்லூர் 72 அரசுப்பள்ளிகளில் 6,101 பேரும் என மொத்தம் 1,026 அரசுப்பள்ளிகளில் 55,819 மாணவ- மாணவிகள் பயனடைந்துள்ளனர்.

மேற்கண்ட தகவலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story