பெண்கள் எதிர்ப்பார்ப்பு


பெண்கள் எதிர்ப்பார்ப்பு
x

நாகை-சன்னாநல்லூர் இடையே மகளிர் இலவச பஸ் இயக்க வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

நாகை-சன்னாநல்லூர் இடையே மகளிர் இலவச பஸ் இயக்க வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மகளிர் இலவச பஸ்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மே மாதம் 7-ந் தேதி பதவியேற்றயுடன் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். இதில் நகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற திட்டமும் இடம்பெற்று இருந்தது.

இந்த திட்டம் மே 8-ந்தேதி முதலே நடைமுறைக்கு வந்தது. இதில் நகர்ப்புறங்களில் வெள்ளை வர்ணம் கொண்ட பஸ்களிலும், கிராமப்புறங்களில் நகர பஸ்களிலும் செயல்படுத்தப்பட்டது. ஆனால் 2 ஆண்டுகளை கடந்தும் இதுவரை புத்தகரம், ஏனங்குடி, ஆதலையூர் ஊராட்சி பகுதிகளை சேர்ந்த பெண்கள் பயன்படுத்தும் வகையில் இலவச மகளிர் பஸ் இயக்கப்படாமல் உள்ளது.

நாகை-சன்னாநல்லூர்

இதனால் நாகூர், நாகப்பட்டினம், சன்னாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்கு செல்லும் பெண்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இப்பகுதியில் ½ மணி நேரத்திற்கு ஒருமுறை மட்டுமே காலை, மாலை வேளைகளில் பஸ்கள் இயக்கப்படுவதால் தகுந்த நேரங்களுக்கு பள்ளி- கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் சென்று வர முடியாமல் உள்ளது.

பஸ் இயக்க நடவடிக்கை

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அந்த பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நாகை-சன்னாநல்லூருக்கு மகளிர் இலவச பஸ் இயக்க வேண்டும். கூடுதலாக பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story