கவர்னர் கொடுத்த விளக்கம்: குளிக்க போய் சேற்றில் விழுந்த கதையாகவே இருக்கிறது - கி.வீரமணி


கவர்னர் கொடுத்த விளக்கம்: குளிக்க போய் சேற்றில் விழுந்த கதையாகவே இருக்கிறது - கி.வீரமணி
x

இனிமேலாவது கவர்னர் தமிழ்நாடு என்று சொன்னால் சரி என கி.வீரமணி கூறியுள்ளார்.

சென்னை,

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு கவர்னர் மாளிகையிலிருந்து விளக்க அறிக்கை ஒன்று வெளிவந்துள்ளது. தமிழகம் என்று தான் ஏன் கூறினேன் என்று விளக்கவேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது ஏன் என்பது முக்கியமான கேள்வி. காசி மற்றும் தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள தொடர்பைக் குறிக்க தமிழகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன் என்று விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த நிகழ்ச்சிக்கும், இந்த வெளிப்பாட்டுக்கும் உள்ள சம்பந்தம் என்ன?. அவர் கொடுத்த அறிக்கை விளக்க அறிக்கை இல்லை - குளிக்கப் போய் சேற்றில் விழுந்த கதை யாகவே இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் நன்றாகவே புரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள், இனி புரிந்துகொள்ள வேண்டியது கவர்னர்ள் தான். இனிமேலாவது கவர்னர் தமிழ்நாடு என்று சொன்னால் சரி.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story