ராக்கெட் செயல்பாடு குறித்து விளக்கம்
ராக்கெட் செயல்பாடு குறித்து விளக்கம்
வால்பாறை
வால்பாறை பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பெங்களூருவில் உள்ள விண்வெளி கல்வி மற்றும் ஆராய்ச்சி முன்னேற்ற நிறுவனம் சார்பில் ராக்கெட் செயல்பாடு குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் தலைமை தாங்கினார். இதில் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், விண்வெளி ஆராய்ச்சி படிப்பு படிப்பதற்கு மாணவ-மாணவிகள் முன் வர வேண்டும். அதற்கு பெற்றோர் தூண்டுகோலாக இருக்க வேண்டும் என்றார்.
பின்னர் ராக்கெட் உருவாக்கப்படும் முறை குறித்தும், ராக்கெட்டை எவ்வாறு விண்ணில் பறக்க வைப்பது என்பது குறித்தும் ஆராய்ச்சியாளர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். இதுகுறித்து மாணவ மாணவிகள் கூறுகையில், முதல்முறையாக நடந்த இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, எங்களை விண்வெளி சார்ந்த பாடப்பிரிவுகளை வருங்காலத்தில் எடுத்து படிப்பதற்கு ஊக்கம் அளித்து உள்ளது என்றனர்.