கல்குவாரி குழிகளில் வெடி வைத்து பாறைகளை உடைத்து சோதனை
தோட்டத்தில் கற்கள் விழுவதாக விவசாயிகள் புகார் கூறியதால் கல்குவாரி குழிகளில் வெடி வைத்து பாறைகளை உடைத்து கனிம வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கிணத்துக்கடவு
தோட்டத்தில் கற்கள் விழுவதாக விவசாயிகள் புகார் கூறியதால் கல்குவாரி குழிகளில் வெடி வைத்து பாறைகளை உடைத்து கனிம வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கல்குவாரி
கிணத்துக்கடவு மேற்கு பகுதியில் தேவராயபுரம், சொக்கனூர், நம்பர் 10, முத்தூர், சிங்கையன்புதூர், வடபுதூர் உள்ளிட்ட இடங் களில் ஏராளமான கல்குவாரிகள் உள்ளன.
இதில் சிங்கையன் புதூர் பகுதியில் உள்ள ஒரு கல்குவாரியில் பாறைகளை வெடி வைத்து உடைக்கும் போது கற்கள் பறந்து அருகில் உள்ள விவசாய நிலங்களில் விழுகிறது. இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக கனிமவளத்துறை அதிகாரியிடம் புகார் செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று விவசாயிகள் புகார் கூறிய சிங்கையன் புதூர் பகுதியில் உள்ள கல் குவாரிக்கு மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் சசிகுமார், கிணத்துக்கடவு தாசில்தார் மல்லிகா, கிணத்துக்கடவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சிவக்குமார், சிங்கையன் புதூர் கிராம நிர்வாக அலுவலர் பாண்டிப்பிச்சன் ஆகியோர் சென்றனர்
கனிமவள அதிகாரிகள்
அவர்கள் முதல் கட்டமாக கல்குவாரியில் 16 குழிகளில் வெடி மருந்துகளை நிரப்பி வெடிக்க செய்தனர். அப்போது பாறை கற்கள் வெடித்து சிதறி அருகில் உள்ள விவசாய விளை நிலங்களுக்குள் விழுந்தது.
இதனால் அிதிர்்ச்சி அடைந்த கண்டு களிமளத்துறை அதிகாரி, குவாரியில் 14 குழிகளில் வெடிமருந்து நிரப்பி வெடிக்க செய்தனர். அப்போதும் பாறைகள் வெடித்து சிதறி அருகில் உள்ள விவசாய விளை நிலங்களுக்குள் விழுந்தது.
எழுதி வாங்கினர்
உடனே கனிவள அதிகாரிகள், குவாரியில் குறைவான குழிகளில் வெடிமருந்து நிரப்பி வெடிக்க செய்தால் விளைநிலங்களுக்குள் பாறை கற்கள் விழாது என்றனர்.
மேலும் இனிமேல் குவாரியில் பாறைக்கற்களை உடைக்க வெடி வைக்கும் போது அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு பாறை கள் விழுந்தால் கரிமவள துறையினர் எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படுவதாக குவாரி உரிமையாளரிடம் கனிமவளத் துறையினர் எழுதி வாங்கினர்.
ஆனால் கல்குவாரியில் குழி தோண்டி பாறைகளை வெடி வைத்து தகர்த்தால் விவசாய விளை நிலங்களுக்குள் கற்கள் விழும். எனவே குவாரியில் வெடிவைத்து கற்களை உடைக்க கூடாது என்று விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து கனிமவளத் துறையினர், வருவாய் துறை அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.