தேனி-போடி இடையே 12 ஆண்டுகளுக்குப் பிறகு அதிவேக ரெயில் இன்ஜின் சோதனை ஓட்டம்


தேனி-போடி இடையே 12 ஆண்டுகளுக்குப் பிறகு அதிவேக ரெயில் இன்ஜின் சோதனை ஓட்டம்
x

தேனியில் இருந்து போடி வரையிலான அதிவேக ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது.

தேனி,

மதுரை-போடிநாயக்கனூர் இடையிலான மீட்டர் கேஜ் பாதை கடந்த 2010-ம் ஆண்டு நிறுத்தப்பட்டு அகல ரயில் பாதை திட்டப் பணிகள் தொடங்கி 12 ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வந்தது. இதில் கடந்த மே மாதம் 26-ந் தேதி முதல் தேனியில் இருந்து மதுரை வரையிலான சேவை தொடங்கப்பட்டது.

இந்நிலையில் மீதமுள்ள தேனி-போடி இடையிலான பணிகள் நடைபெற்று கடத்த 12-ந் தேதி தண்டவாளம் பொருத்தும் பணி நிறைவு பெற்று எஞ்சிய பணிகளும் துரிதமாக நடைபெற்று வந்தது. இந்த பணிகள் நிறைவு கட்டத்தை எட்டி வரும் நிலையில் இன்று இருப்புப் பாதை ஆய்வு செய்வதற்காக தேனியில் இருந்து போடி வரையிலான அதிவேக ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு போடி ரெயில் நிலையத்தில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றதால், அப்பகுதி மக்கள் ரெயில் இன்ஜினுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி வரவேற்றனர். பின்னர் 120 கி.மீ. வேகத்தில் புழுதி பறக்க இன்ஜின் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதனை முன்னிட்டு ரெயில்வே போலீசார் மற்றும் தேனி மாவட்ட போலீசார் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.


Next Story