போலி ஆவணம் தயாரித்து ரூ.3 லட்சம் நிலம் அபகரிப்பு
போலி ஆவணம் தயாரித்து ரூ.3 லட்சம் நிலம் அபகரித்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம்:
புதுச்சேரி மாநிலம் ரெட்டிப்பாளையம் அஜிஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 55). அதே பகுதியை சேர்ந்த சிங்வி என்பவர் விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த திருச்சிற்றம்பலம் கிராமத்தில் உள்ள 66 செண்ட் நிலத்தை கிரையம் பெற்று அனுபவித்து வந்தார். பின்னர் அவர், அந்த நிலத்தை தாமோதரனுக்கு பொது அதிகாரம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் புதுச்சேரி அரவிந்தர் வீதியை சேர்ந்த ஆறுமுகம், வானூர் தாலுகா இடையன்சாவடியை அடுத்த இரும்பை பகுதியை சேர்ந்த அழகப்பன் ஆகிய இருவரும் சேர்ந்து போலி ஆவணம் தயாரித்து அந்த நிலத்தை அபகரித்து விட்டதாக கூறப்படுகிறது. அபகரிக்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.3 லட்சத்து 9 ஆயிரத்து 540 ஆகும்.
2 பேர் மீது வழக்கு
இதுகுறித்து தாமோதரன், விழுப்புரம் மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ஆறுமுகம், அழகப்பன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.