கருமந்துறையில்வீடு புகுந்து தாய்-மகனுக்கு அரிவாள் வெட்டுதி.மு.க. பிரமுகர் கைது
பெத்த நாயக்கன்பாளையம்
கருமந்துறையில் வீடு புகுந்து தாய்-மகனை அரிவாளால் வெட்டியதி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
தாய், மகனுக்கு அரிவாள் வெட்டு
சேலம் மாவட்டம், கருமந்துறை வேலம்பட்டு பகுதியை சேர்ந்த மணி (வயது 25), பி.எஸ்சி., பட்டதாரியான இவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மயக்கவியல் துறை பிரிவில் டிப்ளமோ படிப்பு படித்துள்ளார்.
இந்த நிலையில் சேலம் ஏத்தாப்பூர் பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் சதீஷ், மணிக்கு அறிமுகம் ஆனார். அப்போது அவர், சேலம் காரிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை பிரிவில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, மணியிடம் ரூ.5 லட்சம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் இருந்ததாக கூறப்படுகிறது.
பணத்தை திரும்பகேட்ட நிலையில் மேலும் ரூ.7 லட்சம் பணம் கொடுத்தால்தான் அரசு வேலை கிடைக்கும் என்று கேட்டதால் சந்தேகமடைந்த மணி தனது பணத்தை திரும்ப தரும்படி கேட்டு வந்துள்ளார். இதனிடையே மணி தனது பெற்றோருடன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த சதீசும், மற்றொரு நபரும் அரிவாளால், மணியையும், அவரது தாயார் கரியாளையும் தலைப்பகுதியில் வெட்டியதாக கூறப்படுகிறது.
கைது
உடனே அக்கம் பக்கத்தில் இருந்த உறவினர்கள் வந்ததையடுத்து இருவரும் தப்பியோடிள்ளனர். பின்னர் உறவினர்கள் துரத்தி சென்று சதீஷை மட்டும் பிடித்துள்ளனர். மற்றொருவர் நபர் தப்பி ஓடி விட்டார். பின்னர் சம்பவம் தொடர்பாக கருமந்துறை போலீஸ் நிலையத்துக்கு தகவல் ெகாடுக்கப்பட்டது. இதனிடையே மணி மற்றும் அவரது தாயார் கரியாள் ஆகியோர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே கருமந்துறை போலீசார், பிடிபட்ட சதீஷ் மற்றும் அவருடன் வந்த சென்னையை சேர்ந்த பிரதாப் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் சதீசை போலீசார் கைது செய்தனர். பிரதாப்பை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.