சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல தடை நீட்டிப்பு
சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
திருநெல்வேலி
விக்கிரமசிங்கபுரம்:
பாபநாசம் - காரையாறு மலை சாலையில் கீழ் அணையில் இருந்து காரையாறு வரை தார்ச்சாலை சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் நேற்று முதல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வரை சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல 4 நாட்கள் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் 31-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் அகஸ்தியர் அருவிக்குச் செல்ல எவ்வித தடையும் இல்லை.
இந்த தகவலை, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பை கோட்ட துணை இயக்குனர் செண்பகப்ரியா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story