ஜவ்வாது மலை கோடை விழா மேலும் 4 நாட்கள் நீட்டிப்பு


ஜவ்வாது மலை கோடை விழா மேலும் 4 நாட்கள் நீட்டிப்பு
x

ஜவ்வாதுமலை கோடைவிழா மேலும் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்தார்.

திருவண்ணாமலை

போளூர்

ஜவ்வாதுமலை கோடைவிழா மேலும் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்தார்.

கோடைவிழா

ஜவ்வாது மலையில் கோடைவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதனை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனையொட்டி மலர் கண்காட்சி, காய்கறிகளால் சிறப்பு அலங்காரங்களுடன் அமைக்கப்பட்டிருந்தது. விளையாட்டு ேபாட்டிகளும் மலைவாழ் மக்களுக்கு நடத்தப்பட்டன.

நே்றுடன் விழா நிறைவுெபற்று பரிசளிப்பு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி நேற்று நடந்த விழாவுக்கு கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சரவணன், கிரி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்டாட்சியர் தனலட்சுமி வரவேற்றார்.

இதில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி அரங்குகள் அமைத்த பல்வேறு அரசு துறைகளுக்கும் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகளை வழங்கினார்.

தி.மு.க.ஆட்சியில்தான்...

மேலும் அவர் பேசும்போது தி.மு.க. ஆட்சியில் தான் ஜவ்வாது மலை வளர்ச்சி பெற்றது இது வரலாற்றில் மறக்க முடியாத உண்மை. முதன் முதலாக 26 ஆண்டுகளுக்கு முன் ஜவ்வாது மலையில் கோடை விழா ஆரம்பித்தது தி.மு.க.ஆட்சியில்தான்.

மலைவாழ் மக்களுக்கு சாலை வசதி, மினி பஸ் வசதி குடிநீர் வசதி போன்றவை தலைவர் கருணாநிதி ஆட்சியில் தான் என்று கூறினார். கலெக்டர் முருகேஷ் பேசுகையில், கோடைவிழா வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை 4 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

விழாவில் மாநில தட கள சங்கத் துணைத் தலைவர் எ.வ.வெ.கம்பன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உள்பல பலர் கலந்து கொண்டனர். முடிவில் சுற்றுலாத்துறை அலுவலர் அஸ்வினி நன்றி கூறினார்.


Next Story