தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர அவகாசம் நீட்டிப்பு


தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர அவகாசம் நீட்டிப்பு
x

கோப்புப்படம் 

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

சென்னை பல்கலைக்கழக இளநிலை பாடப்பிரிவிற்கான தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24-ஆம் ஆண்டிற்கான முதுநிலை பட்டப் படிப்பிற்கான மாணாக்கர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் 01.09.2023 வரை நீட்டிக்கப்படுவதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உயர்கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24-ஆம் ஆண்டிற்கான முதுநிலை பட்டப் படிப்புகளில் முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கை 14.08.2023-ல் துவங்கி www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழக இளநிலை பாடப்பிரிவிற்கான தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், முதுநிலை பட்டப் படிப்பிற்கான மாணாக்கர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் 01.09.2023 வரை நீட்டிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story