வரன்முறை செய்ய கால அவகாசம் நீட்டிப்பு


வரன்முறை செய்ய கால அவகாசம் நீட்டிப்பு
x
தினத்தந்தி 28 Sep 2023 11:45 PM GMT (Updated: 28 Sep 2023 11:45 PM GMT)

தேனி மாவட்டத்தில் அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

தேனி

காலஅவகாசம் நீட்டிப்பு

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி மாவட்டத்தில், அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த ஏற்கனவே அரசாணைகள் வெளியிடப்பட்டு இருந்தது. அந்த அரசாணைகளில் குறிப்பிடப்பட்ட 2017-ம் ஆண்டு விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் 29.2.2024 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசாணை மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.

இணையதளம்

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnlayoutreg.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். இதனால் எஞ்சிய அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்து கொள்ள கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதால் இந்த இறுதி வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story