கல்வராயன்மலையில் சாராய ஊறல் அழிப்பு


கல்வராயன்மலையில் சாராய ஊறல் அழிப்பு
x
தினத்தந்தி 24 Jun 2023 12:15 AM IST (Updated: 26 Jun 2023 1:54 PM IST)
t-max-icont-min-icon

கல்வராயன்மலையில் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமல்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் கல்வராயன்மலையில் உள்ள ஈச்சங்காடு வனப்பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள நீரோடை அருகே சாராயம் காய்ச்சுவதற்காக பேரல்களில் 5 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த சாராய ஊறலை போலீசார் கீழே கொட்டி அழித்தனர். தொடர்ந்து சாராயம் காய்ச்சியது தொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story