வீட்டிற்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு


வீட்டிற்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு
x

வீட்டிற்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்கப்பட்டுள்ளது.

கரூர்

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே உள்ள எழுமாத்தூர் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 38). இவரது மனைவி ரேவதி (32). இந்த தம்பதியின் மகள்கள் ஜனனி (8), சிவானி (6). மோகன் தற்போது கரூர் மாவட்டம், புன்னம்சத்திரத்தில் உள்ள ஒரு கல்குவாரியில் கூலி வேலை பார்த்து வருகிறார். இதனால் அவர்கள் புன்னம் சத்திரம் ஆர்.ஜி. நகர் பகுதியில் உள்ள ஒரு மாடி வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மோகன் வீட்டின் கதவை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்தார். இரவு 9 மணி அளவில் வீட்டின் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டுள்ளது.

இதையடுத்து மோகன் எழுந்து சென்று கதவை திறந்து பார்த்தார். அப்போது, மர்ம நபர் ஒருவர் கையில் பட்டாக்கத்தியை வைத்து கொண்டு மோகனிடம் காட்டி சத்தம் போட்டால் குத்தி கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

பின்னர் வீட்டிற்குள் சென்ற மர்மநபர் கத்தியை காட்டி பணம், நகைகளை எடுத்து வருமாறு மோகனிடம் கூறியுள்ளார். அதற்கு மோகன் வீட்டில் பணம் ஏதும் இல்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து அந்த மர்மநபர் மோகன் சட்டை பையில் இருந்த ரூ.ஆயிரத்தை திருடி கொண்டு வீட்டின் கீழே தயார் நிலையில் இருந்த ஒரு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார். இதுகுறித்து மோகன் குடும்பத்தினர் கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிந்து, பணத்தை திருடி சென்ற மர்மநபரை தேடி வருகிறார்.


Related Tags :
Next Story