தொழிலாளியை தாக்கி பணம் பறிப்பு


தொழிலாளியை தாக்கி பணம் பறிப்பு
x
தினத்தந்தி 9 Jan 2023 12:15 AM IST (Updated: 9 Jan 2023 3:01 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் தொழிலாளியை தாக்கி பணம் பறித்த திருநங்கைகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் தொழிலாளியை தாக்கி பணம் பறித்த திருநங்கைகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

தொழிலாளி

கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 41). தொழிலாளி. இவர் கடந்த 6-ந் தேதி இரவு மோட்டார்சைக்கிளில் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகில் சென்று கொண்டு இருந்தார். அங்கு நின்று கொண்டிருந்த திருநங்கைகள் சரவணனை வழிமறித்து பணம் கேட்டுள்ளனர்.

அப்போது சரவணன் பணம் கொடுக்க மறுத்து அவர்களை எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திருநங்கைகள் சரவணனை தாக்கி அவர் வைத்திருந்த ரூ.6 ஆயிரத்தை பறித்து சென்றனர். இதுகுறித்து அவர் கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் செய்தார்.

6 பேர் கைது

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணகிரி பாரதியார் நகரை சேர்ந்த திருநங்கைகள் ரம்யா (38), முல்லை நகர் யுவஸ்ரீ (40), தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கனவாப்பட்டி நிவேதிகா (20), கிருஷ்ணகிரி பாஞ்சாலியூர் நேஷா (21), தர்மபுரி அதியமான்கோட்டை அஸ்மிதா (25), ஆம்பூர் தேவபுரத்தைச் சேர்ந்த கார்த்திகா (22) ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். தொழிலாளியை தாக்கி திருநங்கைகள் பணம் பறித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story