சேலம் பேருந்து நிலையத்தில் முதியவரிடம் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்..!
சேலம் பேருந்து நிலையத்தில் முதியவரிடம் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டன.
சேலம்,
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடமே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன.
தேர்தலில் பொதுமக்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 4 நிலை கண்காணிப்பு குழு, 3 பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சேலம் பேருந்து நிலையத்தில் முதியவர் ஒருவர் நின்றுள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் முதியவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் முதியவரிடம் ரூ.62 லட்சம் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்து முதியவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.