பஸ் கண்ணாடியை உடைத்து கண்டக்டரிடம் பணம் பறிப்பு


பஸ் கண்ணாடியை உடைத்து கண்டக்டரிடம் பணம் பறிப்பு
x

திருக்காட்டுப்பள்ளி அருகே பஸ் கண்ணாடியை உடைத்து கண்டக்டரிடம் பணம் பறிக்கப்பட்டது.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி:

திருக்காட்டுப்பள்ளியில் இருந்து அகரப்பேட்டை வழியாக தோகூர் செல்லும் தனியார் பஸ் செய்யாமங்கலம் ரைஸ் மில் பஸ் நிறுத்தத்தில் நின்றது. பயணிகள் இறங்கி கொண்டிருந்தபோது செய்யாமங்கலத்தைச் சேர்ந்த சஞ்சீவி என்பவர் பஸ்சில் ஏறி கண்டக்டாிடம் இருந்த பணத்தை கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் பயணிகள் அலறி அடித்து வேகமாக கீழே இறங்கிய நிலையில், கண்டக்டர் பணப்பையை பறித்து அதிலிருந்து ரூ5.186-ஐ பறித்துக் கொண்டு போலீசில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று கொலை மிரட்டல் விட்டு, கையில் வைத்திருந்த கட்டையால் பஸ்சின் முன்பக்க கண்ணாடிகளை உடைத்து விட்டு தப்பி சென்று விட்டார். இதுகுறித்து தோகூர் போலீஸ் நிலையத்தில் கண்டக்டர் பழமா நேரியைச் சேர்ந்த ஜீவகுமார் (27) புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் அய்யாபிள்ளை வழக்குப்பதிவு செய்து பஸ் கண்ணாடி உடைத்து பணத்தை பறித்து சென்ற சஞ்சீவியை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story